Subscribe Us

World Vegan Day, All Saints’ Day- Nov 1

 World Vegan Day, All Saints’ Day

November 1



 World Vegan Day

World Vegan Day is an annual event celebrated by vegans around the world every 1 November. The benefits of veganism for humans and the natural environment are celebrated through activities such as setting up stalls, hosting potlucks, and planting memorial trees. The event was established in 1994 by Louise Wallis, then Chair of The Vegan Society in the United Kingdom, to commemorate the 50th anniversary of the founding of the organisation and the coining of the terms "vegan" and "veganism".


All Saints’ Day

All Saints' Day, also called All Hallows' Day, Hallowmas, or Feast of All Saints, in the Christian church, a day commemorating all the saints of the church, both known and unknown, who have attained heaven.





World Tsunami Day- Nov 5

 World Tsunami Day
November-5





After the deadliest Tsunami happened in 
2004 in the Indian Ocean, The United Nations General Assembly designated 5 November as World Tsunami Awareness Day from December 2015. 


To increase the awareness about the Tsunami among over 700 million people live in low-lying coastal areas and Small Islands is the the motive of this day.  

The highest number of deaths taken in the Indian Ocean at the time of tsunami in December 2004. It took millions of lives and affected 14 countries. An estimated 2,27,000 died in Indonesia, Sri Lanka, and India alone and the hardest-hit country was Thailand.

வெண்பூசனை

வெண்பூசனை -வெள்ளைப் பூசணிக்காய்





வெள்ளைப் பூசணிக்காய் - மருத்துவ குணங்கள்

  • பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். 
  • புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். 
  • பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். 
  • பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண்  பார்வை சிறப்பாக இருக்கும்.
  • உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். 
  • காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.
  • காலையில் வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். 
  • பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. 
  • நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், 
  • குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

கொடிய நோய்களுக்கு மருந்து

  • வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். 
  • தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். 
  • உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். 
  • அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.
  • சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூனைக்காலி

 பூனைக்காலி







பூனைக்காலி விதை என்பது வெப்பமயமான மண்டலங்களில் வளரக்கூடியது. இதன் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். காய்களின் மேல் மென்மையான மெத்தென்ற சுனை இருக்கும். அதனாலே இது வெல்வெட் பீன் என்றழைக்கப்படுகிறது. 

இவை மென்மையாக இருந்தாலும் உடலில் பட்டால் இவை நமைச்சலை உண்டாக்கும்.

நரம்புத்தளர்ச்சி பொடி தயாரிக்கும் முறை

பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை நரம்புத்தளர்ச்சி பொடி பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.


ஆண்மை பெருக்கும்

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை,தண்ணீர் விட்டான் கிழங்கு,நெல்லி அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் சீந்தில் பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். விந்து நீர்த்து போவது குறையும். தாது விருத்தியை அதிகரிக்கும். இவை நரம்புகளை வலுவாக்கி ஆண்மை பாதிப்பை சரிசெய்யகூடியது.

​பூனைக்காலி விதை உருண்டை


பூனைக்காலி விதையை மருந்தாக எடுக்காமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.

பொட்டுக்கடலை - 250 கிராம்
பூனைக்காலை விதை- 50 கிராம்
கேழ்வரகு மாவு -ஒரு தேக்கரண்டி,
பனைவெல்லம் - இனிப்புக்கேற்ப,
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி,
நெய் - தேவைக்கேற்ப,
உலர் பருப்புகள் - தேவையெனில்

செய்முறை

வாணலியில் பூனைக்காலி விதை சேர்த்து வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, கேழ்வரகு அனைத்தையும் சேர்த்து வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும்.

நெய் விட்டு உலர் பருப்புகளை ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து நெய் விட்டு உருண்டையாக்கி பிடிக்கவும். சத்தான சுவையான உருண்டை தயார்.

இதை பூப்படைந்த பெண்களும் வயது வந்த ஆண்களும் குடித்து வந்தால் போதும். நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

குறிப்பு மருத்துவ ரீதியில் தொடர்ந்து சுயமாக நீங்களாகவே இதை எடுத்துகொள்ள கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ள வேண்டும்.

எட்டி

எட்டி

 எட்டி -ஸ்ட்ரைகோனஸ்



காட்டு விலங்குகள், நரிகள், மற்றும் கொறித்துண்ணிகள் உட்பட பல வகையான பாலூட்டிகளைக் கொல்ல உணவாக  பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது


புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பரந்தளவிலான பல நோய்களுக்கு சிகிச்சையாக இருப்பது ஸ்ட்ரைகோனஸ் மூலிகை மருத்துவத்தில் ஊக்குவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையுமின்றி இது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை

கார்போகி

கார்போகி






வேறு பெயர்கள்
  • குஷ்ட நாசினி
  • சோமவள்ளி

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த கார்போக அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டவை
  • நரம்புகளுக்கு வலுவூட்டும்.
  • இருமலை குறைக்கும் .
  • ஜீரணத்திற்கு உதவும்.
  • மலச்சிக்கல்,மூலவியாதிகளுக்கும் மருந்தாகும் .
  • ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

வெண்புள்ளி, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்கள் சரியாக கார்போக அரிசி பயன்படுத்தப்படுகிறது

இதனை குளியல் தூளாகவும் பயன்படுத்துகின்றனர்.

HAPPY UGADHI- SMS GREETINGS

 HAPPY UGADHI- SMS GREETINGS.




May this New Year brings with it a pot of full of luck and joy for you and your family.
Happy Ugadi

It is time to put the past behind you and look ahead with optimism.
Happy Ugadi!

On the auspicious occasion of Ugadi,
I pray to God that he may give you good health and success.
Wishing you a life full of utmost peace and joy.
Happy Ugadi!

May this Ugadi bring you joy, health, wealth and good luck through out the year!




Ugadi Wishes
As the New year ushers in...
Here's wishing your way...
A joyous festival..
May happiness and prosperity come to you in abundance..
Happy Ugadi!







May this Ugadi bring in you the brightest and choicest happiness and love you have ever wished for.
May this Ugadi bring you the utmost in peace and prosperity.
May lights triumph over darkness.
May peace transcend the earth.
Happy Ugadi!

Wish your new year brims with a harvest of happiness and prosperity.
Happy Ugadi!

May this Ugadi bring you new spirit, new beginning and new prosperity.
Wishing you a very happy Ugadi!

கழற்சிவிதை

 கழற்சிவிதை





 இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர்.

  • புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.
  • கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.
  • கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
  • கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும்
  • ஆண்கள் உடல்நலம்: விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.


ஏலம்

ஏலம்

ஏலம்




ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம்.


நன்மைகள்


  • ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். 
  • சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. 
  • ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
  • வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
  • ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
  • ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். 
  • ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
  • நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

சீமையகத்தி

சீமையகத்தி

 சீமையகத்தி



வேறு பெயர்கள்
  • வண்டுகொல்லி 
  • மலைத்தகரை
  • பேயகத்தி
  • வண்டுக்கடியிலை

சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை ஆகும். 

உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர் சென்னா அலாட்டா. பழையப் பெயர், கேசியா அலாட்டா என்பதாகும்.


தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும். படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

பூவரசு

  பூவரசு 






பயன்கள் 
பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.
புங்கை

புங்கை

 புங்கை



வேறு பெயர்கள்
  • புங்கை 
  • புங்கு 
  • பூந்தி 
  • கிரஞ்ச மரம்


  • புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
  • புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
  • புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

காயம்

புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். 

வெட்டுக்காயம்

புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக் காயம் விரைவில் ஆறும்.

வீக்கம்

புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்

குங்கிலியம்

 குங்கிலியம்






குங்கிலியம் அல்லது சால் ஒரு மருத்துவ மூலிகையாகும். 
அறிவியல் பெயர்: Shorea robusta
மயிலிறகு

மயிலிறகு

 மயிலிறகு




மயிலிறகு பரிகாரமாய் மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

பணம் மற்றும் நகை வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, அது நிலைத்து நிற்கும்.

வீட்டில் யாராவது வந்து போனால் சிலவேளைகளில் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
வேம்பு அல்லது வேப்பை

வேம்பு அல்லது வேப்பை

 வேம்பு அல்லது வேப்பை


வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை.

பல்வேறு தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு இயற்கை தீர்வாக உள்ளது. முடி, தோல் பிரச்சனைகளுக்காக உள்ள பல மருத்துகளில் வேம்பு தான் முக்கியமான மூலப்பொருள் ஆகும்.

  • நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுபடுத்த கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துர்கள் நம்புகின்றனர். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கொரோனோ நோய்த்தொற்றிலிருந்து விரைவாக மீளவும், வராமல் தடுக்கவும் கண்டிப்பாக உதவும்.

  • தோலில் வேப்ப எண்ணெயைப் தேய்ப்பதால் கொசுகடியிலிருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வேப்ப இலைகளை எரித்தால் கொசுக்கள் ஓடிவிடும்.
  • வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் ஈறு பிரச்சனைகள் , பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் என எல்லாம் சரியாகும்.
  • வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட டீ குடித்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுகண்பீளை

சிறுகண்பீளை

சிறுகண்பீளை


வேறுபெயர்கள்:

  • சிறுகண்பீளை 
  • கண் பீளை
  • கற்பேதி
  • பெரும்பீளை


தாவரப்பெயர் : AERVALANATA

குடும்பம் : AMARANTACEAE

சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.


கல்லடைப்பு, சிறுநீரக கல், நீர்த்தாரை எரிச்சல்

  • சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

  • சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்த்தாரை  எரிச்சல் ஆகியவை குணமாகும்.

  • சிறுகண்பீளை, நெருஞ்சில் வேர், சீதேவி செங்கழுநீர், மாவிலங்கப்பட்டை இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீர்விட்டு நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காய் வற்றியதும் வடிகட்டிக் கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளை குடித்து வர கல்லடைப்பு குணமாகும். 


சிறுசெருப்படை

சிறுசெருப்படை

 சிறுசெருப்படை


சிறுசெருப்படை என்பது வெயில் காலத்தில் பயிராகும் ஒரு படர்கொடி. 

வேறு பெயர்கள் 
  1. செருப்படி, 
  2. சிறுசெருப்படி 

தாவரவியல் பெயர் : Mollugo lotoides

சிறுசெருப்படை சமூலம் 20கிராம் சிதைத்து  4ல்1ன்றாய் காய்ச்சி வடித்து 30மிலி, பனைவெல்லம் சேர்த்து தினம் 4வேளை பருக வெள்ளைப்படுதல், சிறுநீரெரிச்சல் குணமாகும்.



அருகம்புல்- அருகு-அறுகு

அருகம்புல்- அருகு-அறுகு

 அருகம்புல்- அருகு-அறுகு





  • இது உடல் வெப்பத்தை குறைக்கும் 
  • வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. 
  • வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. 
  • கை கால் வீக்கத்தை போக்குகிறது. 
  • மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். 





எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.
தாமரைப்பூ

தாமரைப்பூ

தாமரைப்பூ



தாமரையின் வேர், பூ, இலை, விதை, நார் இலைகள் அனைத்தும் மருத்துவ தன்மை வாய்ந்ததாகும்.

செந்தாமரைப்பூ லேகியம்

செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக். 

இந்த லேகியம், செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. 
முருங்கை

முருங்கை

 முருங்கை


முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். 

அறிவியல் பெயர்: Moringa oleifera

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களும் மிகச்சிறந்த உடலுக்கு அன்றாட தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கியமான உணவுப் பொருள் ஆகும். இந்த முருங்கை உணவானது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கக்கூடிய மற்றும் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தாகவும் பயன்படுகிறது


  • முருங்கைப்பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பம் தணிந்து ஆண்மை அதிகரிக்கும்.

  • மேலும், முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். 

  • முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.
  • முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை தன்மையை அதிகரிக்கும். ஆண் மலடு நீங்கும். மேலும், கண் எரிச்சல், உடற்சூடு ஆகிய வற்றை குணமாக்கும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

  • முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம்குறையும்.

  • முருங்கைவேர் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால்வலி குறையும்.

  • முருங்கை பிசின் நீற்ற விந்துவை இறுக்கும். உடலுக்கு அழகு உண்டாகும். விந்துவைப்பெருக்கும். சிறுநீரை தெளிய வைக்கும்.


 மருள் செடி

மருள் செடி

 மருள் செடி


மருளை நெருப்பில் வாட்டி சாறு எடுத்து காதில் ஊற்றினால் காதுவலி குணமாகும்


வீட்டின் கழிப்பறையில் அதிக உஷ்ணம் உணரப்பட்டால் அங்கு மருள் செடியை வளர்க்கலாம். இது வெளிச்சம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும்.

நந்தியாவட்டை

நந்தியாவட்டை

 நந்தியாவட்டை



நந்தியாவட்டை செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும் மருத்துவ மூலிகைச் செடியாகும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.


நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்த, கரும்பச்சை நிறமான, ஈட்டி வடிவமானவை. நந்தியாவட்டை மலர்கள், ஆண்டு முழுவதும் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.

மாற்றுப் பெயர்கள்
நந்திபத்திரி, 
நந்தியாவர்த்தம், 
சுயோதனன் மாலை 

நந்தியாவட்டை பால் 
நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். 


நந்தியாவட்டை வேர்
நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும். பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம். வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

நந்தியாவட்டை பூ கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.

நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும். நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.

அவுரி -  நீலி

அவுரி - நீலி

 அவுரி -  நீலி





தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகியவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிசமும் மாறும்.

அவுரியிலை, அவுரிவேர் பட்டை, பொறித்த பெருங்காயம், மிளகு இலைச்சாறு சம எடை தூக்கி நன்றாய் அரைத்து சுண்டாக் காய் அளவு மாத்திரை செய்து நாள் ஒன்றுக்கு காலை ஒன்று மாலை ஒன்றாகக் கொடுத்து உப்பில்லாப் பத்தியம் வைக்க நரம்புச் சிலந்தி குணமாகும். மூன்று முதல் ஐந்து நாள் வரை கொடுக்கலாம். இதையே ஈரமாய் இருக்கையில் நரம்புச் சிலந்தி தோன்றிய இடத்தில் வைத்துக் கட்டலாம். 

பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும்.

தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும். 

அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு,  ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து, காலை, மாலை வேளை, 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளும் விலகும்.

அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த  பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. மூலம் மற்றும் மலச்சிக்கல் நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உலகளவில் அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

நொச்சி

நொச்சி

 நொச்சி


தாவரவியல் பெயர் : வைடெக்ஸ் நெகுண்டோ (Vitex negundo)
தாவரவியல் குடும்பம்  : வெர்பினேசியே (Verbenaceae)

வேறு பெயர்கள்
நித்தில்
நிர்க்குண்டி
நெர்க்குண்டி
இந்திர சூரியம் 


வகைகள் 
வெண்ணொச்சி
கருநொச்சி
நீலநொச்சி
நீர்நொச்சி
மயிலடி நொச்சி


  • நொச்சி இலைக்கு பூச்சியைத் தடுக்கும் திறன் இருக்கிறது. அதனால், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர்களில் நொச்சி இலைகளையும் சேர்த்து மூடி வைத்தால் பாதிப்புகள் ஏற்படாது.
  • நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும். 
  • இதன் இலையை பச்சையாகவோ, உலர்த்தியோ தலையணை உறைக்குள் வைத்து அதன் மேல் தலை வைத்து உறங்கினால், தலைவலி, ஜலதோஷம், சைனஸ் கோளாறுகள் சரியாகும். 
  • நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும்
  • நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும்
  • இதன் இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சிக் குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல் வலி மறையும்.
அமுக்குரான் (அஸ்வகந்தா)

அமுக்குரான் (அஸ்வகந்தா)

 அமுக்குரான்


அமுக்கிரா கிழங்கு இது வடமொழியில் அஸ்வகந்தா என அழைக்கப்படும். 



  • அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக்கராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால் `மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்' 
  • அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.
  • அமுக்கரா வேர், தூதுவேளை சமுலம், இரண்டையும் சம எடை எடுத்துப் பொடி செய்து அரை முதல் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, நாட்பட்ட சளிக்கட்டு நீங்கி, உடல் வலிமை அடையும்.
  • அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
  • கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.
  • அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் (½ - 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.
  • அமுக்கராக்கிழங்கு சேர்த்துச் செய்யக்கூடிய `அமுக்கரா லேகியம்' அல்லது `அசுவகந்தி இளகம்', எல்லாச் சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதை உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும்
தும்பை

தும்பை

 தும்பை






தும்பை ரசம்:

தேவையான பொருட்கள்:
  • தும்பை இலை, 
  • தும்பை பூ, 
  • நல்லெண்ணெய், 
  • வரமிளகாய், 
  • பூண்டு, 
  • கடுகு, 
  • மிளகுப்பொடி, 
  • சீரகப்பொடி, 
  • கறிவேப்பிலை, 
  • கொத்தமல்லி, 
  • புளிகரைசல், 
  • மஞ்சள் பொடி, 
  • பெருங்காயப்பொடி, 
  • உப்பு.

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
  2. இதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு (பற்கள் தட்டி) போடவும். 
  3. தும்பை செடியின் இலை, பூக்களை போட்டு வதக்கவும். 
  4. இதன் பின்னர் புளிகரைசல் சேர்க்கவும். 
  5. நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.
இந்த ரசத்தை குடித்து வர நெஞ்சக கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

  • தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
  • தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.


தான்றிக்காய்

தான்றிக்காய்

 தான்றிக்காய்







நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும்.
எள்-எள்ளெண்ணை - நல்லெண்ணெய்

எள்-எள்ளெண்ணை - நல்லெண்ணெய்

 எள்



  • நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். 
  • முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்;
  • மஞ்சள்கருகூட கலந்து தீப்புண், சுண்ணாம்பு வேக்காட்டுனால உண்டான புண்ணுல பூசினா, புண் ஆறும். 
  • நல்லெண்ணெய் தேய்ச்சு வாரம் ரெண்டு தடவ குளிச்சு வந்தா, உடல் வெப்பமும் அது சம்மந்தமான நோய்களும் நீங்குறதோட, கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.
நிலப்பனை

நிலப்பனை

நிலப்பனை 


  • மேக முத்திர வெப்பம்
  • வெண்குஷ்டம், விலா குத்தல்
  • ஒழுக்கு பிரமேகம்
  • நீலஞ்சன நோய்
  • மஞ்சள் காமாலை
  • ஆஸ்துமா
  • ஆண்/பெண் மலடு
  • ஆண்மை அதிகரிப்பு
  • நரம்பு தளர்ச்சி
  • மூச்சுக் குழாய் அழற்சி
  • கண் அழற்சி
  • அஜீரணம் 
  • வாந்தி வயிற்றுப்போக்கு
  • இடுப்புவலி
  • நாய்க்கடி
  • மூட்டுவலி
  • இரைப்பை & குடல் வலி
  • காய்ச்சல்


ஆண்மை பெருக..

ஆண்மை பெருக..

 ஆண்மை பெருக..



ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்:

  • அமுக்குரா கிழங்கு
  • நிலப்பனை கிழங்கு
  • சதாவரி
  • சாலாப்மிசிரி
  • முருங்கை விதை
  • பூனைக்காலி விதை
  • தாமரை விதை
  • அதிமதுரம்
  • நெல்லி வற்றல்
  • முருங்கைப் பிசின்
  • நீர்முள்ளி விதை
  • மதனகாமப்பூ
  • திராட்சை
  • எள்
  • தேற்றான்கொட்டை
  • அத்திப் பழம்
  • பூமி சர்க்கரை கிழங்கு
  • பருத்திக் கொட்டை
  • பிஸ்தா
  • அக்ரோட் பருப்பு
  • வெள்ளரி விதை
  • பாதாம் பருப்பு
  • சாரைப் பருப்பு
  • பூசணி விதை
  • பசும் பால்


முருங்கை பூ 
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆமணக்கு

ஆமணக்கு

 ஆமணக்கு



ஆமணக்கு செடியின் விதை கொட்டை முத்து எனவும் அழைக்கப்ப்படுகிறது.


ஆமணக்கு இலை:

  • வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். 
  • தாய்ப்பால் பெருக்கும். 


ஆமணக்கு வேர்:

  • வாதநோய்களைக் குணமாக்கும். 

ஆமணக்கு விதைகள்: 

  • வயிற்றுவலி, 
  • சிறுநீர் அடைப்பு
  • வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். 

ஆமணக்கு எண்ணெய்:

  • மலமிளக்கும்; 
  • வறட்சியகற்றும்.
  • பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும்



நீர்முள்ளி

நீர்முள்ளி

 நீர்முள்ளி 





நீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும்


நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும்.


நீர்முள்ளி, நெருஞ்சில், சிறுபீளை சேர்ந்த ‘மூம்மூர்த்தி களின் கூட்டணி’ சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் உறுதிமிக்கக் கூட்டணி!

கருவேலம்

கருவேலம்

கருவேலம்







  • இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் இலைச்சாறு வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. 
  • இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் தொண்டைக் கம்மல், பல்வலி போக்கும். பட்டையை உலர்த்திப் பல்தேய்த்து வந்தால் பல் ஆடுதல், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்றவை நலமாகும். 
  • பல் உறுதிப்படும். 
  • கருவேலங்கோந்து உடல் உறுதி பெறவும் இரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது. 
  • பூ மொட்டுகளைத் தொகுத்து உலர்த்திப் பொடி செய்து சர்க்கரையும் கலந்து தர இருமல் குணமாகும்.
கருவேலன் பட்டையைத் துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் காயவைத்து 30 கிராம் கிராம்பு 6 கிராம் மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை பல் துலக்கிவர பல்வலி குணமாகும்.

கருவேலன் பட்டைகளை உடைத்து போட்டுக் கஷாயம் வைத்து வாய்க் கொப்பளித்து வந்தால், வாய் ரணம், ஈறுகளின் வீக்கம் என அனைத்தும் எளிதில் குணம் அடைந்து விடும்.

கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண்களுக்குப் போட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.

கருவேலன் பிசினுடன் கடுக்காய்த் தோல் சேர்த்து இடித்து, சல்லடையில் சலித்து அரை தேக்கரண்டி அளவு தேனுடன் தினமும் இருவேளை சாப்பிட தாது கெட்டிப்பட்டுவிடும்.

கருவேலன் பிசினை துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட் கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தி அடையும். 

அக்கரகாரம்

அக்கரகாரம்

 அக்கரகாரம் 


அக்கரகாரத்தை லேசாக தட்டி சிறிதளவு எடுத்து வாயிலிட்டு அடக்கி கொண்டால் 

  • உமிழ்நீர் ஊறும். 
  • அந்த உமிழ்நீரை விழுங்க நாவில் ஏற்படும் அதி, நடுக்கம் நீங்கும்.
  • பல்வலி குணமாகும்.
  • தொண்டை கம்மல் சரியாகும்.
  • அதீத தாகம் குறையும்.


அக்கரகாரம் வேரை பொடி செய்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும். பற்சொத்தை பிரச்சனை சரியாகும்.

அக்கரகாரம் வாத நோய்களை சரிசெய்ய கூடியது.

நரம்பு தளர்ச்சியை நீக்கி, நரம்புகளை வலுபடுத்தக் கூடியது.

மூளை நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஆண் உறுப்பின் மீது இந்த அக்கரகாரத்தை அரைத்து பூச குறி தளர்ச்சி நீங்கி எழுச்சி பெறும்.ஆண்குறி சோர்வு நீங்கும். 

வேரை பொடி செய்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும். பற்சொத்தை பிரச்சனை சரியாகும்.


முசுமுசுக்கை

முசுமுசுக்கை

முசுமுசுக்கை


முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். 

அறிவியல் பெயர்: Mukia maderaspatana



இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. 



  • முசுமுசுக்கையை புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உளுந்து, தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம். 
  • நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். 
  • தோசைக்கு ஊறவைக்கும் அரிசியுடன் முசுமுசுக்கை இலையை ஊறவைத்து அரைத்தோ, தனியாக முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவுடன் கலந்தோ தோசை சுட்டு சாப்பிடலாம். 

இப்படி சாப்பிடுவதால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.





  • முசுமுசுக்கை இலை சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சைனஸ் பிரச்னை சரியாகும்.
  •  முசுமுசுக்கை இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால்... எலும்புருக்கி நோய், காசநோய் போன்றவற்றை குணமாக்கும். முக்கியமாக நுரையீரல் புற்றுநோயை சரிபண்ணும்.
முடி உதிர்வதைத் தடுக்க

முடி உதிர்வதைத் தடுக்க

 முடி உதிர்வதைத் தடுக்க



முடி உதிர்வதைத் தடுக்க பூண்டுத் தோல்:

கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும். இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, தலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும்.


அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இந்த ரெண்டையும் சம அளவு எடுத்து, இவற்றை விட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி  தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் சகல முடி பிரசனைகளும் நரையும் குணமாகும்.


சீயக்காய்

சீயக்காய்

 சீயக்காய்



சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும்.



சீகைக்காய் கொண்டு முடியை அலசி வந்தால் கூந்தல் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. சீயக்காய் பயன்படுத்துவதால் தலைச்சருமத்தை வறட்சியாக்காது. வாசனையாக இருக்கும். 

கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கி அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்குகிறது.  சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.



வீட்டிலேயே சீயக்காய்(shikakai) தூள் அரைக்க தேவையான பொருட்கள் : 
  1. சீயக்காய் - 1 கிலோ,
  2. வெந்தயம் - 100 கிராம்,
  3. பூலாங்கிழங்கு  – 100 கிராம்,
  4. செம்பருத்திப்பூ- 50 பூ,
  5. எலுமிச்சை தோல் - 25,
  6. காய்ந்த நெல்லி - 100 கிராம்,
  7. பயத்தம் பருப்பு - 1/4 கிலோ,
  8. கார்போக அரிசி - 100 கிராம்,
  9. செம்பருத்தி பூ, இலை - 50 கிராம்,
  10. பூவந்திக் கொட்டை - 100 கிராம்,
  11. மரிக்கொழுந்து - 100 கிராம். 
  12. ஆவாரம்பூ - 100 கிராம்,
  • அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து காய வேண்டும்.
  • நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். 
  • தலையில் எண்ணெய் தடவி வேண்டும்.
  • 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து பூச வேண்டும்.
  • 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
  • அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும்.
வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்

வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்

 வல்லாரை




  • வல்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத் தாவரமாகும்
  • வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்
  • வல்லாரை கீரை மன அழுத்தத்தை போக்கும் ஒரு டானிக்
  • மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்
  • வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது
  • வாயு பிரச்சனை, அல்சர், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை களைகிறது.

பூண்டு

பூண்டு





வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.


முடவாட்டுக்கால் சூப் செய்து கொடுத்தால் மூட்டுவலி, முடக்கு வாதம் நீங்கி குணமடைவார்கள். 


இரண்டு பூண்டு பற்களை கடுகு எண்ணெயில் நசுக்கி பூண்டு கருகும் வரை சூடாக்கவும். இக்கலவை ஆறியவுடன் காதில் ஊற்றவும். இக்கலவையை நல்லெண்ணையைக் கொண்டும் செய்யலாம். இது காது வலியின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

பூண்டுத் தோல்:
கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும். இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, தலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும்.



வெல்லம்

வெல்லம்

 வெல்லம்


ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை

 கல்யாண முருங்கை







தாவரவியல் பெயர்

Erythrina Indica


பெயர்கள்    

முள் முருங்கை
முருக்க மரம்
கல்யாண முருக்கன்
முள் முருக்கு



பூக்கள்

கருப்பையைச் சுத்தமாக்கும். 
பட்டைகள்
  • கோழை அகற்றும்; 
  • காய்ச்சல் நீக்கும்; 
  • குடல்புழுக்களைக் கொல்லும். 

விதைகள் 
  • மலமிளக்கும். 
இலைகள்
  • சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; 
  • தாய்ப்பாலை பெருக்கும்; 
  • மாதவிலக்கைத் தூண்டும். 


திருநீற்றுப் பச்சிலை -மருந்தாவது ‘திருநீறு..!’

திருநீற்றுப் பச்சிலை -மருந்தாவது ‘திருநீறு..!’

 திருநீற்றுப் பச்சிலை



வேறு பெயர்கள்
  • உருத்திரச்சடை, 
  • பச்சை சப்ஜா, 
  • திருநீற்றுப்பச்சை, 
  • விபூதிபச்சிலை, 
  • பச்சபத்திரி, 
  • திருநீத்துப்பத்திரி

தாவரவியல் பெயர் : ஆஸிமம் பேசிலிகம் (Ocimum basilicum) - 
லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது


சப்ஜா பானம்
இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் விதைகளைச் சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம். 
வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை வெளித்தள்ளும் செய்கை இந்தப் பானத்தின் ‘அசையும் சொத்து!’



  • இலைகளைப் பிரயத்தனப்பட்டு அரைக்க அவசியமில்லை. லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி மறையும். 
  • திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.
  • இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
  • இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி.

ஆண்டி ஆக்ஸிடெண்ட் 

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.  இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. 

காராமணி - தட்டைப்பயறு

காராமணி - தட்டைப்பயறு

 காராமணி - தட்டைப்பயறு






    இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


மருத்துவ பயன்கள் :
  • ஜீரண சக்தி அதிகரிக்கும் : காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

  • நச்சுகளை நீக்கும் : காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. இதனால் செல்களின் பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • நல்ல தூக்கத்தை கொடுக்கும் : காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்க வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

  • இதயத்தை பாதுகாக்கும் : காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • எலும்புகளின் பாதுகாப்பில் : காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

  • உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

  • வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.

  • வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.

  • உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.

  • காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.

  • இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.


  • Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.

  • சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.

  • அதிக அளவு காராமணியை உட்கொள்ளும்போது அது வாயுவைப் பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

  • flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.

  • பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம் (hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

  • முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

  • நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.


குங்குமப்பூ

குங்குமப்பூ

 குங்குமப்பூ




குங்குமப்பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும்.




  • குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது. 
  • இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. 
  • இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது. 
  • கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி முழுமையடையும். மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம். இது ஏராளாமான நன்மைகளை தரவல்லது..
  • தொடர்ந்து குங்குமப்பூவை சேர்த்துக்கொண்டால் சளி, இருமல் தாக்கக்கூடிய வாய்ப்புகளும் குறையும்.
  • குங்குமப்பூ உங்கள் சருமத்தை பொலிவடைய செய்யக்கூடும். சிறிது சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூசுங்கள். நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் வரை காய விடுங்கள். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

Happy women’s day- மகளிர் தின வாழ்த்துக்கள்

 மகளிர் தின வாழ்த்துக்கள்





Happy Women's day


Women’s Day Quotes, wishes, messages and images. International Women’s Day 2021



8th March is a day to appreciate women in your lives and also acknowledge their success, contributions and achievements. It is a day of hope and reflection ; and a celebration of gender parity in all walks of life. The day to acknowledge women strength, patience, inner strength and courage. 



Women's Day Quotes
  1. “Always go with the choice that scares you the most, because that’s the one that is going to require the most from you.”~ Caroline Myss
  2. “One of the most courageous things you can do is identify yourself, know who you are, what you believe in and where you want to go.”~ Sheila Murray Bethel
  3. “It takes a great deal of courage to stand up to your enemies, but even more to stand up to your friends.” ~ J. K. Rowling
  4. “I wonder what becomes of lost opportunities? Perhaps our guardian angel gathers them up as we drop them, and will give them back to us in the beautiful sometime when we have grown wiser, and learned how to use them rightly.” ~ Helen Keller
  5. Learn from the mistakes of others. You can’t live long enough to make them all yourself.~ Eleanor Roosevelt
  6. “A woman with a voice is by definition a strong woman. But the search to find that voice can be remarkably difficult.”~ Melinda Gates
  7. The world is happy because you are here to make it smile.  Happy women’s day! 
  8. “Woman – a mother, sister, wife, grandmother, daughter or friend deserves nothing less than the best and utmost reverence and respect , which you gives to god. She is creator like god.” ~ Invajy
  9. “Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away.” ~ Maya Angelou
  10. “We realize the importance of our voices only when we are silenced.” ~ Malala Yousafzai


Women’s Day Wishes

  1. “Woman can be powerful without being aggressive. Isn’t it amazing? May the marvelous feminine energy cover our world with its warmth and greatness. Happy Women’s day to all of us!”
  2. “The beautiful smile can cut thousands of negativity around, remember whenever you walk, you walk with a smile. Happy women’s day!”
  3. “When god was creating woman he knew “SHE” is the only one who can handle the earth and hence gave birth to all of us, happy women’s day!”
  4. “A woman is so much more than just a human being. She has Gods power to create a life, to cope with so much pain and somehow always end up being the strongest one in every room. Happy Women’s Day to all Goddesses out there!”
  5. “Women are always a source of inspiration for the family and the society. Happy Women’s Day to you!
  6. “The world will be boring and lifeless without a woman. Happy women’s day to all cute and lovely ladies!”


Women’s Day Quotes for Wife

“My world has become beautiful and organized just because of you. You are no less than an angel and a perfect wife in every sense. Happy women’s day, wife!”

“Whenever a man falls in life, a loyal woman (wife) always stand beside him to pick him up and keep going. I wish to a happy international women’s day to my lovely wife!”

“Blessed are those men who get to marry a woman who is compassionate, loving, caring, affectionate, and take care of him like a child. Happy women’s day!”


If you have liked these inspirational women’s day quotes, please share it at your favorite social networks.

Thank you for reading this post. Which quote you liked the most in above list ? Please let us know your favorite quote in comments section.

துத்திக் கீரை

துத்திக் கீரை

 துத்திக் கீரை



  • துத்திக்கீரை அல்லது வட்டத்துத்தி புதர் கையைச் சார்ந்த செடி ஆகும்.
  • துத்தி விதை மூலம் இனப்பெருக்கம் அடைகின்றது. 
  • துத்திக்கீரையில் இலை, வேர், பட்டை, பூ ஆகியவை பயன் தரும் பகுதிகள் ஆகும்.


துத்தி இலை
  • அழற்சியைப் போக்கும்
  • மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும்.
  • நோய் நீக்கி உடலைத் தேற்றும்;
  • கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்;
  • சிறுநீரைப் பெருக்கும். 


துத்தி பூ
  • இரத்தப் போக்கை அடக்கும்.
  • காமம் பெருக்கும்.
  • இருமலைக்குறைக்கும்.
  • ஆண்மையைப் பெருக்கும்.
  • குளிர்ச்சி உண்டாக்கும். 

துத்தி விதை
  • இனிப்புச் சுவையுடையது. 
  • சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்ற வற்றைக் குணமாக்கும்.

மருத்துவ பயன்கள்
  1. துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.
  2. துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்
  3. துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
  4. துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
  5.  துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
  6. துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
  7. துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் இதர நோய்கள் தீரும்.
  8. துத்தி இலைகளையும், துத்திப் பூக்களையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து வலி ஏற்படும் இடங்கள், வீக்கம் மற்றும் புண்களின் மீது பற்று போல் போட்டால் வலி குறையும். புண்கள் மற்றும் வீக்கங்கள் விரைவில் நீங்கும்.

அதிமதுரம்

 அதிமதுரம்






மலட்டு தன்மை 

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு அதிமதுரத்தை நன்றாக பொடித்து பசுப்பாலில் போட்டு கலக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்புகள் வலிமைபெறும், தாது புஷ்டி உண்டாகும். 

பெண்களின் கருப்பையில் இருக்கும் குறைகளை போக்கி சீக்கிரத்தில் கருவுற செய்யும். 


வழுக்கை 

தற்காலங்களில் மிக இளம் வயது ஆண்களுக்கு கூட தலைமுடி சீக்கிரம் உதிர்ந்து தலையில் வழுக்கை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனை கொண்டவர்கள் அதிமதுரத்தை நன்கு பொடி செய்து, அம்மியில் போட்டு அதனுடன் சிறிது எருமை மாட்டு பாலை விட்டு நன்கு அரைத்து, வழுக்கை ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் ஊறிய பின்பு குளித்து வந்தால் வழுக்கை ஏற்பட்ட இடங்களில் முடி முளைக்க தொடங்கும்.


  • அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி  தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
  • அதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில்  போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.
  •  
  • அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும், காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  
  • நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
  •  
  • அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு  கரைந்து விடும்.
  •  
  • அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் (தலை மண்டை) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும்.  கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
  •  
  • அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை  குணமாக்குகிறது.

மாதுளம்

 மாதுளம்







  • கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.

  • மாதுளை பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடியாக்கி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து எடுத்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் ஈறுகள் வலுவாகும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பல் வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.
  • மலத்துடன் ரத்தம் வெளியேறுகிறது என்றால் 50 மில்லி மாதுளை பழச் சாறு எடுத்துக் கொண்டால் இதிலுள்ள துவர்ப்பு சக்தி இப்பிரச்சினையை கட்டுப்படுத்தி தீர்வு கொடுக்கும்.
  • மாதுளைப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து இதயத்தின் தசைப் பகுதிகள் வலுவுடன் செயல்படுவதற்கு உதவுகிறது.
  • குடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  • தூங்கும் முன்பு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள இரும்பு சத்தினை உடல் உடனடியாக உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் சி உதவுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகி ஆரோக்கியமான தூக்கத்தை தருகிறது.



Labels

Sep September Oct October Sept Aug August July ஆவாரம் பூ ஓமம் சுக்கு திப்பிலி துளசி கொன்றைபட்டை நாவல் பட்டை #jan #january ஆஸ்துமா கடுக்காய் நீரிழிவு #laugh Nov ஆண்மை பெருக இஞ்சி இருமல் கண்டங்கத்திரி கிராம்பு கீழாநெல்லி குப்பைமேனி சளி சீயக்காய் தான்றிக்காய் தேன் நெல்லிக்காய் பனங்கல்கண்டு பல் வலி பூண்டு மஞ்சள் மருதம் மிளகு முடக்கத்தான் முடி உதிர்வதைத் தடுக்க மூட்டு வலி # World Braille Day #Happy #Happynewyear2021 #New year #OrphansDay #WorldWarOrphansDay #australiaday #happy new year #happymakarsankranti #happypongal #laughterday #lohri #may #republicday #worldlaughday 17 Ambedkar Remembrance Asteroid Day Dec Diwali Wishes to All Environment Day Father’s Day Happy Diwali to All Images January July 17 Jun Third Sunday June 3rd sunday Messages Mudakathan Mudakathan Keerai Olympic Day Photos about Diwali. Pictures Quotes Status Tamil New year Vadanarayanan Widow’s Day Yoga Day consumer jan newyear2021 tsunami ugadi vegan day youthday அக்கரகாரம் அசோகப்பட்டை அசோகு அதிமதுரம் அத்திப்பட்டை அமுக்குரான் அருகம்புல் அருகு அறுகு அல்சர் அவுரி அஸ்வகந்தா ஆடாதோடை ஆண்மை ஆமணக்கு ஆறாத புண்கள் இக்குரம் இடுப்பு வலி இலந்தைப்பழம் ஈரல் பலம் எட்டி எலுமிச்சை எலும்புருக்கி எள் எள்ளெண்ணை ஏலக்காய் ஏலம் ஓரிதழ் தாமரை கடுகு கரிசலாங்கண்ணி கருத்தடை கருவேலம் கற்பூரம் கல்யாண முருங்கை கல்லடைப்பு கழற்சிவிதை காகண்டம் காசினி கீரை காணாக் கடி விஷம் காதுவலி காராமணி கார்போகி குங்கிலியம் குங்குமப்பூ கொசுக்களை விரட்ட சளித்தொல்லை சித்தரத்தை சிறியாநங்கை சிறுகண்பீளை சிறுசெருப்படை சீந்திலுப்பு சீந்தில் கொடி சீமையகத்தி சீரகம் சுக்குட்டிக் கீரை சுண்டைக்காய் சூலை நோய்கள் செவ்வரளி சோற்றுக் கற்றாழை ஜலதோஷம் ஜாதிக்காய் ஞாபக சக்தி தலைசுற்றல் தலைவலி தாமரைப்பூ திருநீற்றுப் பச்சிலை துத்திக் கீரை தும்பை தூதுவளை தேங்காய் எண்ணெய் தொண்டைப்புண் நந்தியாவட்டை நரம்புத்தளர்ச்சி நல்லெண்ணெய் நாயுருவி நாவல் நிதகம் நிலப்பனை நிலவேம்பு நீரடைப்பு நீர்முள்ளி நீலி நீலி நெல்லி நுரையீரல் புற்றுநோய் நெல்லி நெல்லிக் கனி நெல்லிமுள்ளி நொச்சி பக்கவாதம் பச்சைக் கற்பூரம் படர் தாமரை படர்தாமரை பனங்கற்கண்டு பப்பாளி பல்வலி பிரண்டை புங்கன் பூனைக்காலி பூவரசு பேன் தொல்லை மஞ்சள் காமாலை மணத்தக்காளி மன அழுத்தம் மயிலிறகு மருதாணி மருள் மலமிளக்கி மாதுளம் முசுமுசுக்கை முடக்கறுத்தான் முடக்குவாதம் முடவாட்டுக்கால் முருங்கை முருங்கை பூ மூக்கிரட்டை மூச்சுத்திணறல் ரத்தசுத்தி வசம்பு வல்லாரை வாதநாராயணன் விரைவீக்கம் வெட்டிவேர் வெட்டுக்காயம் வெண் குஷ்டம் வெண்குஷ்டம் வெண்புள்ளி வெண்பூசனை வெந்தயம் வெல்லம் வெள்ளைப்படுதல் வேப்பை வேம்பு

Facebook